பாரிய யானைத்தந்தங்கள் வவுனியாவில்....!

  • Shan
  • August 04, 2018
33shares

வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் யானை தந்தங்களுடன் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரே விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராயன்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று இரவு 10 மணியளவில் இதுசம்பந்தமாக இரகசியத் தகவல் ஒன்று கிடைத்ததாகவும் அந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அதிரடிப் படையினர் தேடுதல் மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இரண்டு யானைத் தந்தங்கள் அதிரடிப் படையினரால் கைப்பற்றபட்டதுடன் அதை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட தந்தங்களையும் சந்தேக நபர்களையும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் அதிரடிப் படையினர் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதுடன் கைதுசெய்யபட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கனகராயன் குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்