விஸ்வரூபமெடுக்கும் சட்டவிரோத செயலிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே காரணம்! திடுக்கிடும் தகவல்!

48shares

முல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடிக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம், மற்றும் கடற்படையினர் துணை நிற்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி தொழிலை நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கண்டனப் பேரணியை மேற்கொண்டிருந்தனர்.

பேரணியின் நிறைவில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தினை சென்றடைந்த மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீரியல் வள திணைக்கள உதவிபணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி நீண்டநேரமாக காத்திருந்த போதிலும் மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

இதன்காரணமாக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதுடன், அலுவலகத்தின் சுற்றுவேலியும் முற்றாக தகர்க்கப்பட்டது.

இதனையடுத்து மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிய மாவட்ட அதிகாரிகள், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்வரும் 08 ஆம் திகதி உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்த முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்திற்கு எதிரில் முகாமிட்டு மூன்றாவது நாளாகவும் மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபவர்களுக்கு பொலிஸார் துணை நிற்கின்றமை தவறானது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் தொடரும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்திற்கு எதிரில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!