ஸ்ரீ லங்கா அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு மைத்திரி வைத்த ஆப்பு!

  • Shan
  • August 05, 2018
17shares

நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை வைத்தியசாலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டிட தொகுதியை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடனேயே அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என செய்திப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வாறான எந்தவொரு முன்மொழிவாயினும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த அவர், அத்தகைய தீர்மானத்திற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி என்ற வகையில் தனது சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை தான் உறுதியாக நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு பொருத்தமானதல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!