தென்மராட்சியில் பொலிஸாரின் அதிரடி!

  • Shan
  • August 05, 2018
60shares

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சில இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரால் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சியின் பல இடங்களில் இன்று மேற்கொண்ட தேடுதலின் போதே சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், யாழ்ப்பாணம் உட்பட மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து, 4 வாள்கள், 1 மோட்டார் சைக்கிள் மற்றும் சங்கிலிகள் உட்பட இரும்பு ஆயுதங்களும் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்களில் 4 பேர் இந்த வருடம் உயர்தரம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்