வைத்தியசாலைக்குள் தோண்டப்பட்ட பாரிய குழி; அதிர்ச்சியடைந்த பொலிஸ்! (புதிய புகைப்படங்கள் இணைப்பு)

  • Shan
  • August 05, 2018
682shares

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள ஆயுர் வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் கோயில் ஐயர் உட்பட ஐந்துபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விளக்கமறியல் உத்தரவை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒன்பதாம் நாள் வரை என குறிப்பிட்டு கட்டளையிட்டது.

வாகரை கண்டலடியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டிடத்திற்குள் புதையல் தோண்டப்படுவதாக வாகரைப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்படி வைத்தியசாலைச் சூழலை சுற்றிவளைத்த பொலிஸார் சனிக்கிழமை அதிகாலை இந்த ஐவரையும் கைது செய்தனர்.

புதையல் தேடும் நடவடிக்கையின்போது குறித்த சந்தேகிகள் வைத்தியசாலைக் கட்டிடத்தைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸாரால் வழக்குப் பதியப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நீதவான் ஏ.சி.றிஸ்வான் மேற்படி உத்தரவை வழங்கி கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த வைத்தியசாலைக் கட்டடத்தின் உட்பகுதி பெரியதொரு கிணற்றின் ஆழத்தில் தோண்டப்பட்டிருந்ததை பொலிஸார் தமது சுற்றிவளைப்பின்போது கண்டு பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!