வவுனியாவில் சற்றுமுன்னர் விபத்து: மகிழுந்தை மோதிய இருவர் வைத்தியசாலையில்...!

  • Shan
  • August 05, 2018
51shares

வவுனியாவில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

வவுனியா வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர், மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி வைரவப்புளியங்குளம் வீதியூடாக பயணித்த மகிழுந்து மீது குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கிப் பயணித்த உந்துருளி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேலாகியும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகளிக்கவில்லை என சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!