நாம் வீழ்ந்த இனமல்ல என்பதை வெளிப்படுத்தும் சாதனைகள்!

  • Shan
  • August 05, 2018
165shares

வடகிழக்கு மாற்றுத் திறனாளிகளின் அபார திறமைகளை வெளிக்கொணருமுகமாக ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் அனுசரணையுடன் மாபெரும் விளையாட்டுப் போட்டி ‘தமிழ் பரா’ என்ற நாமத்துடன் வடகிழக்கில் நடைபெற்றுவருகின்றது.

வீரவீராங்கனைகளின் மெய்வன்மையினைப் புடம்போட்டுக்காட்டும் இந்த விளையாட்டு விழாவில் தாயகத்தின் மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர்.

மாற்றுத் திறன் என்ற சொல்லின் கனதிக்கேற்றாற்போல் நாம் எதற்குமே சளைத்தவரல்லர்; வீழ்ந்தாலும் வீழ்ந்தே கிடப்பவரல்லர்; விழ விழ எழுந்து நிமிர்ந்த பரம்பரையில் உதித்தவர் என்ற உன்னத வாசகங்களை மெய்ப்பிப்பதாய் தமிழ் பரா விளையாட்டுப் போட்டி அமைகின்றது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு!

என்ற வள்ளுவன் வாக்கிற் கூறியதுபோல் சமூகத்திலிருந்து எழும் பிற்போக்குத்தனமான கருத்தியல்களை தமது ஊக்கம் எனும் உறுதியான வினையால் மாற்றிக் காட்டுபவர்கள்தான் எம் மாற்றுத் திறனாளிகள்.

அவர்கள்தம் ஊக்கத்திற்கான சிறந்த களமாக, ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் சிந்தனையில் உதயமானதே எம் தாயகத்தில் தனித்துவமாகிப்போன தமிழ் பரா விளையாட்டுப் போட்டி.

குறித்த விளையாட்டுப் போட்டியில் ஏனையவர்களால் விளையாடப்படும் சகல போட்டிகளும் உள்வாங்கப்பட்டதன் நோக்கம், மாற்றுத் திறனாளிகள் எதற்குமே சளைத்தவர்களல்லர் என்பதை இந்தச் சமூகத்திற்குப் புடம்போட்டுக் காட்டுவதற்காகத்தான் இருக்கமுடியும்.

வெற்றி தோல்வி என்பன எப்பக்கமெனினும், ”விளையாடுவோம், உடலாலும் உள்ளத்தாலும் பலமாகுவோம்” என்ற ஆத்மார்த்த நோக்கமே தமிழ் பரா விளையாட்டுப் போட்டியின் இருப்பு.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகிய தமிழ் பரா விளையாட்டுப் போட்டியானது தொடர்ந்துவரும் நாட்களிலும் நடைபெறவுள்ளதுடன் இன்றைய தினமும் விசேடமாக பல விளையாட்டுப் போட்டிகள் களமிறக்கப்பட்டன.

இந்த விளையாட்டுப் போட்டியில் வீர வீராங்கனைகளாகக் கலந்துகொண்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தமது மெய் வன்மையினை ஆர்வத்தோடு வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!