மூன்றாவது ஆண்டாகவும் சம்பியனானது உதயம் விழிப்புலனற்றோர் சங்கம்!

  • Shan
  • August 05, 2018
8shares

வடகிழக்கு தமிழ் பரா விளையாட்டின் மற்றுமொரு போட்டியான பார்வையற்றவர்களுக்கான சத்தப் பந்து பத்துக்குப் பத்து கிரிக்கெட் போட்டியானது, கடந்த இரண்டாம் நாளன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் இடையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியின் தலைவர் M. ஜதீஸ் வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர், தமது 64 என்ற இலக்கினை 8 ஓவர்களில் நிறைவு செய்து 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றதோடு இவ்வாண்டிற்கான ஆட்ட நாயகனுக்கான விருது அந்த அணியைச் சேர்ந்த S.செந்தூரன் என்பவருக்கே கிடைத்தது.

2018 ம் ஆண்டிற்கான தமிழ் பரா போட்டியின் சத்தப்பந்து பத்துக்குப் பத்தில் ஷம்பியனாக கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றி வாகை சூடிக்கொண்டது.

கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்று வரும் இந்தப் போட்டியில் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தொடர் சம்பியனை நிலை நாட்டிவருகின்றனை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்