வடமாகாண ஆசிரியர்களுக்கான நியமனம்!

  • Shan
  • August 05, 2018
52shares

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் பதவி வெற்­றி­டங்க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை ஆட்சேர்ப்புச் செய்­வ­தற்­காக வட மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வால் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நடத்­தப்­பட்ட திறந்த போட்­டிப் பரீட்­சைக்­குத் தோற்றி சித்­தி­ய­டைந்த 194 பேருக்கு இவ்வாறு தமிழ் மொழிமூல பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இன்று மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தார்.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!