யாழில் சற்று முன்னர் கோர விபத்து: அப்பாவுக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்!

  • Shan
  • August 06, 2018
1344shares

யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது உந்துருளியில் பயணித்த வேளை அவருக்குப் பின்னால் பயணித்த தண்ணீர் தாங்கி வாகனம் அவரை மோதிக் கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் சம்பவத்தில் பலியானார்.

45 வயதுடைய குறித்த நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்தில் பலியானதுடன் அவரது 18 வயதுடைய மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!