வாகனத்துள் மாணவி இருந்தபோது.........! அதிர்ந்துபோன தந்தை!

  • Shan
  • August 07, 2018
152shares

இன்று காலை உயர் தரப் பரீட்சைக்காகச் சென்ற மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரதேசத்தைச் சேர்ந்த சுமனா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்காகச் சென்ற மாணவிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது அப்பாவின் மகிழுந்தில் உயர்தரப் பரீட்சைக்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாணவி மகிழுந்தின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணித்ததாகவும், இடையில் ஒரு கடைக்குச் செல்வதற்காக குறித்த மகிழுந்தை அவரது அப்பா வீதியோரமாக நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வழியால் வந்த பேருந்து ஒன்று குறித்த மகிழுந்தை மோதி விபத்தை ஏற்படுத்தியது.

திடீரென்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் மாணவி அதிர்ச்சியடைந்ததுடன் அவரது அப்பா மற்றும் அங்கிருந்தோர் அலறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மகிழுந்தினுள் இருந்த குறித்த மாணவி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளார்.

இதேவேளை அந்த மாணவி தற்பொழுது பரீட்சைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவரது தந்தை அதே பாடசாலையின் ஆசிரியர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!