நீர்கொழும்புக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

1shares

நீர்கொழும்பு மீன் விற்பனைச் சந்தைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதன்மூலம் குறித்த பிரதேச மீனவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது.

கடலும் களப்பும் நகருக்கு பெரும் அழகு சேர்க்கினற நீர்கொழும்பு நகரம் மீன் பிடித்துறைக்கும் உல்லாசப் பயணத்துறைக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்குகின்றது.

சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் இந்த நகரில் பெரும்பான்மையான மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் நகருக்கு அதிகமாக வருவதன் காரணமான விடுதிகளும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.

கடற்றொழில் சிறப்புற்று விளங்கும் நீர்கொழும்பு நகரின் பல இடங்களிலும் மீன் விற்பனை சந்தைகள் திறந்த சநைதையாகவும் காணப்படுகின்றன.

இதன் காரணமாக இந்த மீன் விற்பனைச் சந்தைகளில் காலை முதல் முற்பகல் வரை பெரும் எண்ணிக்கையானோர் வெளியிடங்களில் இருந்தும் மீன் கொள்வனவு செய்வதற்கு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

நீர்கொழும்பு கொட்டுவை மைதானம் அருகில் அமைந்துள்ள பிரசித்தமான மீன் விற்பனைச் சந்தைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், உயர் கல்வி மாணவர்கள், உள்நாட்டு உல்லாசப் பயணிகள் என பர தரப்பினரும் வருகைத் தருகின்றனர்.

கடலில் சிறிய படகுகளில் சென்று பிடிக்கப்படும் மீன்களை வலைகளிலிருந்து பிரித்தெடுக்ககும் போதே மீன்களை கொள்வனவு செய்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதை அவதானிக்க முடிகிறது.

குறித்த இந்த கடற்கரைப் பகுதி பல வருடங்களுக்கு முன்னால் பொது மக்கள் பொழுது போக்குக்காக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த கடற்ரையில் மீன்கள் கருவாடு தயாரிப்பதற்காக காய வைக்கப்படுகின்றன.

இதேவேளை மீன்விற்பனைச் சந்தைக்கு வெளிநாட்டு உல்லாசாப் பயணிகளை அழைத்துவரும் வழிகாட்டிகள் மீன் விற்பனை சந்தை பற்றியும் மீன் பிடித்துறை பற்றியும் விளக்குவதன் மூலம் பிரதேச மீனவர்கள் பணமீட்டுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!