கீத் நோயர் தொடர்பாக எனக்கு நினைவில்லை! மஹிந்த!

10shares

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு நினைவில்லையெனவும், இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் தேவை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ச விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பழிவாங்கும் படலத்தின் ஒரு அங்கம் இதுவென தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜயசூரியவே தன்மீதான விசாரணைகளுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உட்பட இராணுவ வீரர்கள் 8 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மகிந்த ராஜபக்ஸவின் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு தீர்மானித்தது.

இதனையடுத்து இன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொழும்பு 7 விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமுலம் பெறப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை. ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!