மருந்துக் கழிவுகள் தொடர்பாக இராஜதந்திர செயற்பாடு தேவை!

3shares

புத்தளம் கடற்பகுதியில் கரையொதுங்கிய இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் செயற்பட வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்காவிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான செயற்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புத்தளம் கடற்பகுதியில் கடந்த 14 ஆம் திகதி சில மருத்துவக் கழிவுகள் மீட்டெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு புத்தளம் கடற்பகுதியில் மீட்கப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் இந்தியாவினுடையது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சிறிலங்காவிலும் மருத்துவக் கழிவுகளை அகற்ற முறையான திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!