35 படகுகள் தீக்கிரை,அச்சத்தில் மக்கள்; இனவன்முறையை தூண்ட முயற்சி!

  • Sethu
  • September 07, 2018
33shares

வெருகல் பிரதேசசபைக்கு உட்பட்ட சித்தந்திட்டி எனும் பகுதியில் 35 படகுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கங்கை ஆற்றில் மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் குறித்த படகுகளே இன்று அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

26 பேருக்குச் சொந்தமான குறித்த படகுகள் அனைத்தும் டயர்கள் மற்றும் பெற்றோல் என்பனவற்றைக் கொண்டு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெருகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த படகுகள் அனைத்தும் தலா 50,000 ரூபாய் பெறுமதியானது என்றும் இதனை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் புரிந்து வரும் தொழிலாளிகள் இதன்காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள இரு இன குழுக்களுக்கு இடையே முறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!