வெளிநாட்டவர்கள் மத்தியில் சாதனை படைத்த ஈழத்து இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்!

189shares

பிரித்தானியாவில் தனித்து விடப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் பல்கலைக்கழகத்தில் அதிக கூடிய புள்ளி பெற்று சாதித்துள்ளார்.

பிரியங்கன் தவராஜா என்பவரே இவ்வாறு சாதித்துள்ளார். தனது 16 வயதில் அவரது சகோதரன் அவரை தனியாக விட்டுவிட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.

ஆசிரியர்கள் மீதான அதிக பயத்துடன் Harris Academy Greenwichஇல் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. என் மனதில் கவனம் இல்லை. என் படிப்பை தொடர முடியும் என்று நான் நம்பவில்லை.. என 19 வயதான பிரியங்கன் தவராஜா குறிப்பிட்டுள்ளார்.

பெர்க்லி சபை அவரை பராமரிக்க ஒரு இல்லத்தை கண்டுபிடித்தது. அதற்கமைய அவர் Christ the King Sixth Form இல்லத்திற்கு சென்றார். "பெர்க்லி சபை இல்லை என்றால் நான் தெருக்களில் இருந்திருப்பேன் என பிரியங்கன் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்குமிடம் மற்றும் பண தேவைகளுக்கு உதவினார்கள். இதன் மூலம் கற்கையில் கவனம் செலுத்துவேன் என நம்பினார்கள். வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்தது. 2008ஆம் ஆண்டில் 9 வயது இருக்கும் போதும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவின் Lewisham பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்டார். பின்னர் அவர் தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கும் இங்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் எனது படிப்பில் கவனம் செலுத்தினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Christ the King சென்றடைந்த பின்னர் நான் இரண்டு தொழில் செய்தேன். கிடைக்கும் நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்தினேன். சமூக வாழ்க்கைக்கு எனக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. தொழில் முடிந்தவுடன் பாடசாலைக்கு சென்றேன். கடின உழைப்பினால் BTEC பொறியியலில் 3ஆம் பிரிவை கற்றேன். அதற்கமைய கடந்த வாரம் எனது படிப்பின் முடிவுகள் வெளியாகியது.

வந்த முடிவுகளின் கடிதத்தை பிரிப்பதற்கே பயந்தேன். திறந்து பார்த்த போது என்னால் நம்பவே முடியவில்லை. அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்றிருந்தேன். அனைத்து பாடங்களிலும், D*, D*, D* என சித்திகளை பெற்றேன்.

இலையுதிர் காலத்தில் Brunel பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்ட படிப்பை தொடங்கவுள்ளேன். நான் நீண்ட காலமாக Brunel படிக்க விரும்புகிறேன் என பிரியங்கன் தெரிவித்துள்ளார்.

அந்த பொறியியல் பல்கலைக்கழகம் பிரபலமானது. UCL இல் எனக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது, ஆனால் நான் Brunelயை தெரிவு செய்தேன்.

ஐந்தாண்டுகளில் தகுதி பெற்ற பொறியியலாளராக இருக்க விரும்புகிறேன், என பிரியங்கன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்