இலங்கையில் 1,341 பேரிடம் துப்பாக்கி; டிசம்பர் 31ம் திகதிக்குள் வருமாறு அழைப்பு!

  • Sethu
  • September 08, 2018
23shares

துப்பாக்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் ரவைகளின் உரிமையாளர்கள், பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்து வருடாந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை மாவட்ட செயலகத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இதுவரை பாதுகாப்பு அமைச்சில் 1,341 துப்பாக்கள் பதிவு செய்யப்பட்டுளளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் என் ஜே. பண்டித ரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், துப்பாக்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த காலத்திற்கு பின்னர், அனுமதிப்பத்திரமில்லாத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!