இலங்கையிலிருந்து இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பதற்கான செயற்குழு!

  • Shan
  • September 09, 2018
38shares

இலங்கையில் கடற்சார் காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய செயற்குழுவை ஸ்தாபித்தலுக்கான (ToR) ஆய்வெல்லையை இந்திய பெருங்கடல் மண்டல நாடுகள் சங்க (IORA) உறுப்பு நாடுகள் நிறைவு செய்கின்றன.

IORA உறுப்புநாடுகள் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 வரை கொழும்பில் ஒன்றுகூடி கடற்சார் பாதுகாப்பு மற்றும் காவல் பற்றிய செயற்குழுவை ஸ்தாபித்தல் தொடர்பில் இடம்பெற்ற ஆரம்ப செயலமர்வில் அதன் (ToR) ஆய்வெல்லையை நிறைவுசெய்தன.

2017 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க டெல்பர்னில் இடம்பெற்ற அமைச்சர்கள் பேரவையில், கடற்சார் காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய செயற்குழுவை ஸ்தாபித்தல் உட்பட கடற்சார் பாதுகாப்பு மற்றும் காவல் பற்றிய IORA செயற்திட்டம் 2017-2021, இன் நடைமுறையாக்கத்தை இலங்கையானது ஒருங்கிணைக்கும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயற்குழுவானது பங்குதார்கள் மத்தியில் நடைமுறைசார் ஒருங்கிணைப்பிற்கு அனுசரணை வழங்குவதன் ஊடாக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் கடற்சார் உத்தியோகத்தர்கள் மற்றும் நிபுணர்களை உறுப்பு நாடுகளுக்கிடையில் ஈடுபடுத்துவதற்கான பொறிமுறையை வழங்குகின்றது.

ஆய்வெல்லையானது (ToR) கடற்சார் காவல் மற்றும் பாதுகாப்பு களத்தில் உள்ளடக்கப்பட்ட கொள்கை முன்னுரிமைகளை முன்னெடுக்கும் பணிக்குழுவின் நோக்கங்களை காட்டுகின்றதுடன் அவை பின்வருனவற்றை உள்ளடக்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கூட்டு கடற்சார் காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய ஆபத்துகள், அச்சுறுத்தல்கள், மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் IORA உறுப்புநாடுகள் மத்தியில் பொதுவான புரிந்துணர்வை தாபித்தல்

திறன் மேம்பாடு, மற்றும் வல்லமை கட்டியெழுப்பல் உட்பட கடற்சார் காவல், மற்றும் பாதுகாப்பு பற்றிய ஒருங்கிணைந்த கொள்கை அணுகு முறையொன்றை ஸ்தாபித்தல்

கடற்சார் காவல், மற்றும் பாதுகாப்பு களத்தில் திறன், வல்லமை, மற்றும் நிறுவக கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பங்காண்மையை IORA கட்டமைப்பிற்குள் கட்டியெழுப்பல் மற்றும் IORA உறுப்புநாடுகள் மத்தியில் கடற்சார் களவிழிப்புணர்வை (MDA) மேம்படுத்தல்

என்பனவாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் ஆரம்ப செயலமர்விற்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவினால் இணை அனுசரணை வழங்கப்பட்டதுடன் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மடகஸ்கார் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளால் இணை தலைமைத்துவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்