ஆடு மேய்க்கச் சென்றவர் கண்ட அதிர்ச்சிக் காட்சி; ஊரே சோகத்தில்!

  • Shan
  • September 09, 2018
973shares

வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற வளவில் உள்ள மரம் ஒன்றிலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவ்விடத்தில் ஆடு மேய்க்க சென்ற நபரொருவர் சடலத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மற்றும் இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் வேலன்குளம் கிராம சேவையாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள்.

வவுனியா பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸார் மரணம் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே தற்கொலைக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளைஞனின் சடலத்தினை இரவு 10.05 மணியளவிலேயே திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஸோர் பார்வையிட்டதுடன் கயிற்றினை வெட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இவ் இளைஞனின் மரணம் பாரதிபுரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!