மஹிந்தவாதிகளை விளாசித் தள்ளிய ரணில்!

  • Shan
  • September 09, 2018
70shares

“குழந்தைகள் சங்கிரிலா ஹோட்டலில், குடிகாரர்கள் வீதியில், நாம் ஆட்சியில்” இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலானோர் கடந்த 5ஆம் திகதி ஜனபலய கொழும்புக்கு என அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜிபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெருந்திரளான மக்களும் பங்கேற்று இருந்தனர்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நேற்று புத்தளத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்திரனராக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பெருந்திரலான மக்களுடைய பலம், இவர்கள் அரசை கவிழ்ப்பார்கள், என்னை விரட்டியடிப்பார்கள், ஜனாதிபதியை விரட்டியடிப்பார்கள் என்றே ஊடகங்கள் தெரிவித்து வந்தன.

ஆனால் இறுதியில் என்ன நடைபெற்றது? ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள் சங்கிரிலா ஹோட்டலில் 25, 30 அறைகளை பெற்றுக்கொண்டு ஒவ்வொருவரும் அங்கு தங்கிக் கொண்டனர். குழந்தைகள் சங்கிரிலா ஹோட்டலில், குடிகாரர்கள் வீதியில், நாம் ஆட்சியில்.

ஊடகங்கள் எவ்வளவு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் திட்டுவது எங்களை மாத்திரமேயாகும். ஆனால் நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மஹிந்தவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது என தெரவிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு மஹிந்த ராஜபக்சவுக்கு துணையென்ற பெயரில் செயற்படும் விதம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!