விடுதலைப் புலிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நாவில் கூறவுள்ள மைத்திரி!

  • Shan
  • September 09, 2018
50shares

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை தாம் எதிர்வரும் 24ஆம் திகதி, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டம் குறித்து சிலர் விமர்சனம் செய்வார்கள். ஆனால், இது ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுவது முக்கியம் என்று உணர்கிறேன். எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள உரையின் போது சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்யும் தேவை உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா கூட்டத்தின் போது விபரித்துக் கூறப்படும்.

ஐ.நாவுடனான கலந்துரையாடல்கள் மட்டுமே, சிறிலங்கா குறித்த மனித உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உள்ள ஒரே வழியாகும்.” என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!