தேயிலை மலையில் சிறுத்தைக்கு நேர்ந்த கொடுமை; தலையைக் காணவில்லை!

  • Shan
  • September 09, 2018
105shares

நுவரெலியாவில் கொலை செய்யப்பட பின்னர் தலை அறுத்துச் செல்லப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதோட்ட தேயிலை மலையிலிருந்தே குறித்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிறுத்தை ஒன்றின் தலையற்ற சடலம் காணப்படுவதாக குருந்துவத்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மேற்படி அதிகாரிகள் குறித்த சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றினர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர்கள்,

”சுமார் ஆறு ஆடி நீளம் கொண்ட இந்த சிறுத்தை தாக்கி கொலை செய்யபட்டுள்ளதுடன் இதன் தலைப்பகுதி இனந்தெரியாதவர்களால் வெட்டிக் கொண்டு செல்லபட்டுள்ளது.

வயது 25தொடக்கம் 30வரையான வயதினை கொண்ட இந்த சிறுத்தையை வெடிவைத்தோ அல்லது நஞ்சு கலந்த உணவுகளை வழங்கியோ மடக்கியிருக்கவேண்டும். அதன்பின்னர் குறித்த சிறுத்தை மோசமாகத் தாக்கபட்டு கொலை செய்யபட்டிருக்கலாம். என சந்தேகம் வெளியிட்டனர்.

எவ்வாறாயினும் சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உடவலவ மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!