முப்பது ஆண்டுக்கும் மேலாக இருட்டுமடுவைச் சூழ்ந்துள்ள இருள்!

  • Shan
  • September 09, 2018
101shares

முல்லத்தீவில் இருட்டுமடு எனும் கிராமத்துக்குச் செல்கின்ற பிரதான சாலை ஒன்று கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் உள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள இருட்டுமடு கிராமத்திற்கு செல்கின்ற பிரதான வீதியானது உடையார்கட்டு சந்தியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் நீளமான வீதி எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வீதியானது கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதுடன் இந்த வீதியால் பயனிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கிராம மக்களால் பலமுறை எடுத்து கூறப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல் வாதிகள் பலரும் கண்டும் காணாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருட்டுமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!