யாழ்ப்பாணத்தில் இராணுவம் இப்படிச் செய்வதனால் அப்படியெல்லாம் நடக்காது - மகேஸ் விளக்கம்!

  • Shan
  • September 09, 2018
73shares

ஸ்ரீ லங்காவின் சில முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது இராணுவத்தின் முன்னெச்சரிக்கையான நடவடிக்யே அன்றி வேறொன்றும் இல்லை எனத் தெரிவித்த அவர், தங்களது சுய லாபத்திற்காக சிலம் இதனை விமர்சனம் செய்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா இராணுவத்தின் தற்போதைய பாதுகாப்பு தயார்நிலை குறித்து விளக்கமளிக்கும் ஊடக அறிக்கையொன்றிலெயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஸ்ரீ லங்கா இராணுவத்தினருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் முன்னாள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும் தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனை சில அரசியல்வாதிகளும் முன்னைய அதிகாரிகளும் தங்களது சுய லாபத்திற்காக மக்களை திசை திருப்பும் நோக்கில் உண்மைக்கு புறம்பானவகையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இராணுவ முகாம்களை மாற்றுகின்றமையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!