இராணுவம் சுகபோக வாழ்க்கை வாழ நாம் நடுத்தெருவில்!

28shares
Image

ஸ்ரீலங்கா இராணுவம் தமது காணிகளிலுள்ள வருமானங்களை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் தாம் நடுத்தெருவில் நிகர்கதியாகியுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கேப்பாபுலவில் எஞ்சியுள்ள மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவித்து தமது வறுமை நிலையை போக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது..

104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்றும் கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானமாக பெறுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!