15 பஸ்கள் மீது கல் வீச்சு, இருவருக்கு காயம் வீதிகளில் டயர் எரிப்பு, இளைஞர்களை தேடுகிறது பொலீஸ்; அடுத்து நடக்கப்போவது என்ன?

  • Sethu
  • September 09, 2018
46shares


பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை மற்றும் 15 பஸ்கள் மீது கல் வீச்சு நடத்தியது அதனால் இருவருக்கு காயம் ஏற்பட்டமை மற்றும் வீதிகளில் டயர் போட்டு எரித்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இளைஞர்களை தேடும் பணியினை ஏறாவுபர் பொலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் ஞாயிற்றுக்கழமை (09) ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (07) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகியதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்ச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளைகைது செய்யப்பட்டுள்னார்.

இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கையெடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் இன்று இரவு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்களின் முயற்சியால் மோகன் அவர்கள் பிணையில் செல்ல ஏறாவூர் பொலீசர் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல இளைஞர்களுக்கு பொலீசார் வலைவீசி தேடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்