கட்டுநாயக்கவில் சிக்கிய மோசடி கும்பல்; ஈழத்து மக்களே எச்சரிக்கை!

347shares

நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றுவதாகக் கூறி பல்வேறு இடங்களில் டிக்கெட் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட மூவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழந்தை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தசை உருக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுவனின் புகைப்படத்தைக் காட்டி சந்தேக நபர்கள் பணம் சேகரித்துள்ளனர்.

கட்டுநாயக்க எவரிவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் நேற்றைய தினம் பணம் சேகரிக்கும் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 40, 39 மற்றும் 70 வயதுடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

இது போன்று தமிழர்கள் வாழும் வடக்குக்கிழக்கு பகுதிகளிலும் தென்னிலங்கையை சேர்ந்த மோசடி நபர்கள் நிதி சேகரித்து வருவதாகவும், இது தொடர்பில் தமிழ் மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!