கணவன் கழுத்தில் சிராய்ப்பு; மனைவி இடுப்பில் கண்டல்; அதிரவைத்த சடலங்கள்!

  • Shan
  • September 10, 2018
383shares

வவுனியா பரசங்குளம் கிராமத்தில் நேற்று முந்தினம் காலை பூட்டிய அறையில் இருந்து இளம் தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் போர்வையால் போர்க்கபட்டு நிலத்தில் கிடந்த நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்டு வந்த நிலையில் அவர்களது சாவு குறித்த பிந்திய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

கணவனின் கழுத்து நெரிபட்டதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே கணவனின் சாவுக்கு காரணம் என்றும் தூக்கில் தொங்கிய மனைவியின் இடுப்புக்குக் கீழே கண்டல் காயங்கள் காணப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளம் கணவனும், மனைவியும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் காதலித்து பதிவுத் திருமணம் முடித்துள்ளனர். பின்னர் பரசங்குளம்பகுதியை சேர்ந்த கணவனின் பாட்டனாரின் வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏழாம் திகதி இரவு அனைவரும் உணவுண்டபின் நித்திரைகொள்ள சென்றநிலையில் நேற்று முந்தினம் காலை அறையில் இருந்து குறித்த தம்பதிகள் வெளியே வராதநிலையில் இளைஞனின் பேத்தியார் கதவைத் தள்ளியுள்ளார். எனினும் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டிருந்து. பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்துக் கூறியுள்ளார்.

இதன்பின்னர் யன்னல் வழியாக ஏறிபார்த்தபோதே குறித்த இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் இந்த தகவல் புளியங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டது.

மீட்கபட்ட சடலங்களில் கணவனின் நெற்றிப்பகுதியில் காயம் ஒன்று இருப்பதுடன் கழுத்துப் பகுதியிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். சடலத்திற்கு அருகில் இருந்து கொட்டான் ஒன்றும் கடிதம் ஒன்றும் பொலிசாரால் மீட்கபட்டுள்ளது. குறித்த கடிதத்தில் எமது சாவிற்கு யாரும் காரணமில்லை, என்னைமன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளதுடன் வேறுவிடயங்களும் எழுதப்பட்டிருந்தது.

சடலத்தை நேற்றுமுந்தினம் மதியம் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்திருந்தார்.

குறித்த சம்பவம்தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவி வந்தநிலையில் இன்றயதினம் சட்டவைத்திய பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதன்னடிப்படையில் குறித்த இளைஞரின் கழுத்து நெரிபட்டு மூச்சுத் திணறி இறந்துள்ளதாகவும் பெண் தூக்கில் தொங்கியமையினாலேயே மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண்ணின் இடுப்பிற்கு கீழான பகுதியில் கண்டல் காயங்கள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கௌதமி வயது19, நந்தகுமார் வயது 22 என்பவர்களே சாவடைந்துள்ளதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!