வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் விஜேகுணரத்னவுக்கு சி.ஐ.டி வலை வீச்சு!

29shares

முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, சி.ஜ.டி.யில் நேற்று ஆஜராகுமாறு கூறப்பட்டது. இருப்பினும் அவர் ஆஜராகவில்லை. ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தலைமறைவாகியிருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. அறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விஜேகுணரத்ன தற்போது மெக்சிகோவில் இருப்பதால் அவரால் இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விஜேகுணரத்ன மெக்சிக்கோவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், இன்று வரை தாம் அறிந்திருக்கவில்லை என குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!