கிழக்கில் இன வன்முறையை தூண்டும் தண்ணீர் தொழிற்சாலை; 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டம்?

  • Sethu
  • September 10, 2018
94shares

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு இருபது ஆயிரம் லீற்றர் குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் மாகா மினரல் வாட்டர் தொழிற்சாலையின் ஊடாக கிழக்கில் ஒரு இன வன்முறையை கட்டியெழுப்பும் சதி முயற்சிகளை சில இனவாதக் குழுக்கல் ஈடுபட்டுவருவதை காணக்கூடியதாக உள்ளது.

மாவட்டத்தின் சுற்றுச்மூழல் பிரச்சனையை தமிழ் முஸ்லீம் இனவாத பிரச்சினையாக காட்டி அதன் ஊடாக தங்களது வர்த்தக நடவடிக்கையை நிறைவேற்றிக்கொள்ள உரிய தரப்பினர் முயன்று வருகின்றனர்.

அரசாங்கமும் இது குறித்து கவனம் செலுத்தாது வேடிக்கை பார்த்ததன் விளைவாக இன்று இந்த பிரச்சினை ஹர்த்தால் போராட்டம் வரைக்கும் சென்று அதன் ஊடாக 15 பஸ்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு வன்முறையில் போய் முடிந்துள்ளது.

குறித்த பிரச்சினை இந்த அளவுக்கு செல்வதற்கு காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தண்ணீர் இன்றி தவிக்கப்போகும் 55 நாடுகளுக்கு தண்ணீரை ஏற்றுமதி செய்யப்போகும் தென்னாசிய நாடுகள் குறித்த பல உண்மைகளை பல்கலைக்கழக நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர் .

அதாவது 2050 இல் உலகில் உள்ள 55 நாடுகளில் தண்ணீர் இல்லாது போய்விடும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இவ்வாறு குடி தண்ணீர் இன்றி தவிக்கும் நாடுகளுக்கு தென்னாசியாவில் உள்ள இலங்கை மாலைதீவு நேபாளம் போன்ற நாடுகளில் இருக்கும் ஆழ்துளை குழாய்களில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை ஏற்றுமதி செய்ய தயாராகி

வருகின்றனர் எனவும் குறித்த நீர் சுப்பர் பெற்றோலை விட அதிக விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கான முன்னாயத்த ஏற்பாடாகவே இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் பற்று புல்லுமலை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலையில் இருந்தும் எதிர்காலத்தில் குடி நீர் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்பதுதான் அதிர்ச்சியான தகவலாக உள்ளது.

புல்லுமலை தண்ணீரின் சிறப்பு!

வெளிநாட்டிற்கு ஏற்றும் அளவுக்கு அப்படி என்ன புல்லுமலை தண்ணீர் உள்ளது?

புல்லுமலை நிலத்தின் மேல் தளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து உள்ளது. அங்கு தண்ணீர் போதிய அளவுக்கு இல்லை ஆனால் 150 அடி ஆழத்திற்கு மேல் தளத்தை உடைத்துக் கொண்டு சென்றால் உலகத்துலேயே மிகவும் சுத்தமான குடிதண்ணீர் உண்டு அந்த தண்ணீரை சுத்திகரிக்க வேண்டிய தேவை இல்லை அது கற்பாறைகளுக்கு கீழ் ஊரும் சுத்தமான குடி நீர் இவ்வாறான தண்ணீரையே வெளிநாடுகளும் அங்கு இருக்கும் சுற்றுலா விடுதிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பாவனைக்கு விரும்பி வாங்கப்படுகின்றன.

இதனை இலக்காக கொண்டே தற்பொது அந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுகின்றது.

இதனால் நடக்கப்போவது என்ன?

இது நிலத்தின் மேல்தளத்தில் உள்ள நீரை பாதிக்காவிட்டாலும் இதனூடாக கீழ்தளத்தில் உள்ள சுத்தமான நீர் உறிஞ்சப்பட்டால் குறித்த நிலத்திற்கு கீழ் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர் நீராக மாறி அந்த பகுதியே பாலைவனமாக மாறும்.

மாகா கம்பெனி மிகவும் நுட்பமாக சகல ஆய்வுகளையும் செய்து குறித்த தண்ணீரை அரவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நோக்குடன் இந்த தொழிற்சாலையை அமைத்து வருவது தெளிவாகியுள்ளது.

நாள் ஒன்றிற்கு இருபது ஆயிரம் லீற்றர் நீரை உறிஞ்சி விற்கும் திட்டம் கொதித்தெழுந்த மக்கள் !

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு இருபது ஆயிரம் லீற்றர் குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் மாகா மினரல் வாட்டர் தொழிற்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்காத நிலையில் 07.09.2018 அன்று மாவடடம் தலுவிய அளவில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அது மாபெரும் வெற்றியளித்துள்ள நிலையில் குறித்த தண்ணீர் தொழிற்சாலை குறித்த முழுமையான விபரங்களை ஆராய்கிறது இந்த கட்டுரை.

குறித்த தொழிற்சாலை மூலம் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஏற்கனவே குறித்த பகுதியில் உள்ள மக்கள் குடிக்க நீர் இன்றி கஷ்டப்படும் நிலையில் எங்களது நீரை உறிஞ்சி விற்பதற்காக அமைக்கப்படும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என கோரியே அப்பகுதியில் உள்ள விவசாய அமைப்புகள் மீனவர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கம் பொதுமக்கள் இணைந்து கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் கருத்துக்கள்!

பெரிய புல்லுமலை மக்கள் அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலை குறித்தும் அது அமைந்துள்ள காணி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

கடந்த கால ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான பல பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

'தண்ணீர் பஞ்சமுள்ள இடத்தில் நீரை உரிஞ்சாதே' 'நிறுத்து நிறுத்து வரண்ட பூமியாக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்து' 'அழிக்காதே அழிக்காதே இயற்கை விவசாயத்தை அழிக்காதே' 'அபிவிருத்தி என்ற போர்வையி வளத்தை சூரையாடாதே ' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது இதை விட சமூகவலைத்தளங்கள் ஊடாக பல காணொளிகளையும் பதாகைகளையும் காணக்கூடியதாக இருந்தது இவை அனைத்துமே தமிழ் மக்கள் குறிப்பாக அந்தப்பகுதி மக்கள் சுற்றுச் சூழல் குறித்து மிகுந்த அக்கரை கொண்டிருப்பதையும் அதனால் தங்களுக்கு வரும் பாதிப்புக்கள் குறித்து அச்சமடைந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

தொழிற்சாலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்!

பெரிய புல்லுமலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கும்புறுவெளி என்ற இடத்தில் அமைக்கப்படும் குறித்த தொழிற்சாலை தங்களது வாழ்வாதாரத்திற்கு சவாலாக அமையும் என்பதுடன் எதிர்காலத்தில் புல்லுமலை கிராமம் பாலைவனமாக மாறும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே குடிநீர் பஞ்சம் உள்ள புல்லுமலையில் குறித்த இடத்தில் மாத்திரமே நீர் உள்ளதாகவும் அந்த இடத்தில் இருந்து நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் நீரை உறிஞ்சி எடுப்பதன் ஊடாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகில் உள்ள குளம் கிணறுகள் வற்றி எதிர்காலத்தில் வறட்சி ஏற்படும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழும் இடமாக இது உள்ளதால் அங்குள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் தொழிற்சாலை கழிவுகள் அங்கு பாவிக்கப்படும் இரசாயண பதார்த்தங்களின் ஊடாக அந்த பகுதியில் உள்ள மீன் இனங்கள் அழிந்து போகவும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதை விட குறித்த காணியில் விலையுயர்ந்த பல மரங்கள் காடுகளாக உள்ளதாகவும் அவை வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

காணிக்கு உரிமை கொண்டாடிய நபர்!

வயோதிபர் ஒருவர் குறித்த காணியில் உள்ள 85 ஏக்கர் காணி தன்னுடையது என்றும் அதை கேட்டால் தர மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காணி உறுதியுடன் வந்து நின்றார் அவர் கொண்டு வந்த உறுதி 1985 ஆண்டு பதிவு செய்யப்பட்ட உண்மையான உறுதி அவர் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு அவருக்கு சார்பாக வரும் என கூறியபோது. இதன் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதால் தனக்கு பயமாக இருக்கு என்று கூறினார்.

பிரதேச செயலாளரின் கருத்து!

செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் பின்னர் பின்வருமாறு தெரிவித்தார் குறித்த காணி தனியார் காணியா அரச காணியா என நிலஅளவை திணைக்கள அதிகாரிகளை கொண்டு அறிய வேண்டும் எனவும். ஏனைய தொழிற்சாலை கட்டடத்திற்கான அனுமதி மற்றும் மரம் வெட்டுவது மண் ஏற்றுவது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அந்தந்த திணைக்களங்களின் ஊடாக அறியப்படவேண்டும் எனவும் என்னதான் தனியார் காணியில் தொழிற்சாலை அமைத்தாலும் அதுகுறித்து அந்த பகுதி மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் குறித்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தங்களுக்கு தெரியாது எனவும் இது குறித்து அரசாங்க அதிபருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக மக்களின் ஆர்ப்பாட்டங்களின் போது கூறினார்.

தொழிற்சாலை காணி யாருடையது?

குறித்த தொழிற்சாலை சுமார் நூறு ஏக்கர் காணிக்குள் அமைந்திருந்தாலும் அந்த தொழிற்சாலைக்கான காணியாக 25 ஏக்கர் காணியையே உறுதி எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

ரொமென்ஷியா லங்கா பிரைவேட் லிமிட்டர்ட் என்ற தனியார் கம்பெனியின் பெயரில் மாகா மினரல் வாட்டர் தொழிற்சாலை என அந்த தொழிற்சாலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த தனியார் கம்பெனியின் பெயரிலேயே அந்த காணி உள்ளது. மீதி ஏக்கர் காணிகள் யாருடைய பெயரில் உள்ளது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை.

குறித்த காணி மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு பின்னால் காத்தான்குடியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியபோதும்.

குறித்த கொம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளராக காத்தான்குடியை சேர்ந்த மும்தாஜ் மௌளவி என்பவரும் பணிப்பாளராக எம். எஸ். மொஹமட் நௌஷார்த் என்பவருமே உள்ளனர்.

இதற்கு அனுமதி வழங்கியது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண மதில் கட்டுவதாக இருந்தாலும் மலசலகூடம் கட்டுவதாக இருந்தாலும் சிறு தொழில் வீட்டில் செய்வதாக இருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மட்டக்களப்பில் எந்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படி ஒரு தொழிற்சாலையை அமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது?

மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் அபிவிருத்தி குழு கூட்டங்களில் அனுமதி பெறப்படாமல் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியை பெறாது அங்குள்ள அங்குள்ள மக்களுடன் கலந்தாலோசிக்காது எவ்வாறு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆனால் இதற்கான அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்டதற்கான செயற்றிட்ட புத்தகம் அவர்களிடம் உண்டு.

இந்த தொழிற்சாலையின் ஊடாக நாள் ஒன்றுக்கு 20,000 லீற்றர் தண்ணீரை உறிஞ்சி அதனை குடிநீராக மாற்றி அதை போத்தல்களில் அடைத்து விற்பதற்கான திட்ட வரையப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதிகளை மாகாண மற்றும் மாவட்ட பிரதேச திணைக்களங்களிடம் இருந்து அவர்கள் பெற்றுள்ளதற்கான சான்றுகள் உண்டு.

கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபடங்களில் செங்கலடி பிரதேச சபை செயலாளர் கையொப்பமிட்டுள்ளார்.

மத்தியஇ மாகாண சுற்றாடல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தொழிற்சாலை தொடர்பான பல ஆய்வுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அவர்களிடம் உண்டு.

இத்தனையும் பெறப்பட்டுள்ள நிலையில் காடுகளை அழிப்பதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள் என்று தெரியவில்லை?

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இந்த செயற்றிட்டத்திற்கும் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

ஆனால் ஒரு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியாது அவரது அனுமதியை பெறாது ஒரு செயற்திட்டத்தை இந்த மாவட்டத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது?

ஒரு வருட காலமாக பெறப்பட்ட அனுமதிகள்!

குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதிகளை பெற ஒரு வருட காலமாக தாம் அழைந்து திரிந்ததாகவும் மக்கள் சொல்லுவதை போல் இதில் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏதுமில்லை மத்திய சுற்றாடல் திணைக்களம் அதனை உறுதிப்படுத்தி தந்துள்ளது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் மக்களை சிலர் குழப்புகிறார்கள் மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை எங்களிடம் பேசி தீர்த்து கொள்ளலாம். நாங்கள் இந்த பகுதி மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுக்க தீர்மானித்துள்ளோம் என கம்பெனியின் பணிப்பாளர் எம். எஸ். மொஹமட் நௌஷார்த் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சி!

குறித்த தொழிற்சாலையை நிறுத்தக் கோரி செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் அதை நிறுத்தவேண்டும் என்று சண்டையிட்டிருந்தனர். அத்துடன் வியாழேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியதுடன் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார் ஆனால் அது குறித்து கிஞ்சித்தும் அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை

உரிமை கொண்டாடிய காத்தான்குடி தவிசாளர்!
குறித்த தொழிற்சாலை என்னுடையது அதனை தடுத்து நிறுத்த முடியாது அது சட்டப்படி அனுமதி எடுக்கப்பட்டே கட்டப்படுகிறது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் அஸ்பர் அவர்கள் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கடுமையாக பேசியிருந்தார். அதற்கு எதிராக தமிழ் பிரதிநிதிகள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிபுணர் குழுவிற்கு என்ன நடந்தது!

குறித்த தொழிற்சாலை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு என்ன நடந்தது என இன்றுவரை தெரியவில்லை. அந்த குழு இன்று வரை அந்த தொழிற்சாலைப் பக்கமே செல்லவில்லை என அஸ்வரே கூறியுள்ளார்.

தண்ணீரை சேமிக்கும் உலக நாடுகள்!

2050 ஆண்டு காலப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று பயந்த நாடுகள் பல தண்ணீரை சேமிப்பதற்கான பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அது குறித்து கவலை கொள்ளாது தான்தோன்றிதனமாக குடிநீரை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கி வருகின்றது.

சுற்றுச்சூழலுக்கு பொறுப்பாக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் இது குறித்து கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

இது வரை கடல் குளம் ஏரிகளின் நீரை சுத்தம் செய்தே குடிதண்ணீராக மாற்றி விற்பனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

உன்னிச்சையில் குளத்தில் உள்ள நீரை சுத்தம் செய்தே மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் குடிநீரை பெறகின்றனர் ஆனால் புல்லுமலையில் மட்டும் நிலத்தடி நிரை உறிஞ்சி விற்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

7 வது தடவையாக நடந்த போராட்டம்!

குறித்த தொழிற்சாலையை நிறுத்தக் கோரி 7 வது தடவையாக மாவட்டம் தழுவிய அளவில் ஹர்த்தால் போராட்டம் நடைபெற்று அது பாரிய வெற்றியை பெற்றுள்ளது. யுத்தகாலத்தில் நடைபெற்ற போராட்டத்தை போன்று தமிழ் முஸ்லீம் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இந்த போராட்டத்திற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை எனின் அடுத்ததாக உண்ணாவிரதப்போராட்டத்தில் குதிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!