மாணவரின் இரத்தம் குடிக்கும் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு!- வவுனியாவில் கொந்தழிப்பு!

182shares

கனகராயன்குளத்தில் நேற்று முன்தினம் ஶ்ரீலங்கா பொலிசாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 13 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுளாளர். இந்த கொடூரமான செயலுக்கு நீதி வேண்டியே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியை ஊரை விட்டு வெளியேற்று, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னைநாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்திருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக்கோன் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் விரைவில் இதற்கான நல்ல தீர்வினை தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் இக் கவனயீர்ப்பு போராடட்டம் முடிவிற்கு வந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் கனகராயன்குளம் பாடசாலை மாவணவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுஸ்ரீரன் மற்றும் கனகராயன்குளம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கனகராயன்குளம் வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!