பொது மக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்

494shares

படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்ற பின்னர் படுகொலை செய்த நபரே இவ்வாறு தேடப்படுகிறார்.

நேவி சம்பத் என்ற ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்ற இந்த சந்தேக நபரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபரின் தகவல் அறிந்தால், 011-2422176, 011-2320141, 011-2320145, 011-2393621 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!