இலங்கையில் சித்திரவதைக்குப் பின்னர் மரண தண்டனையா?

54shares

இலங்கை மிகமோசமான சித்திதிரவதைகள் நடைபெறும் நாடுகளின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளமையை சர்வதேச மன்னிப்புச்சபை எதிர்த்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்இவிதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்இமரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்பநடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடையை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் வேறு பல நாடுகள் ஈவிரக்கமற்ற இந்த நடைமுறையை பின்பற்றியவேளை இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன்மாதிரியாக விளங்கியதுடன் தலைமைத்துவம் வகித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல உலகநாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள தருணத்தில் இலங்கை பிழையான திசையில் பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரமான இந்த நடைமுறையை பின்பற்றும் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைந்து கொள்ள முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!