பெண்ணின் மோசமான செயலால் தலைகுனிவை சந்தித்துள்ள பிரித்தானியா!

141shares
Image

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள சீன உணவகத்தில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் இளம்பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரித்தானிய அரசுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சீனத்து உணவம் ஒன்று செயல்பட்டு வருகிறது, சம்பவத்தன்று நடந்த விவகாரத்தை வீடியோவாக குறித்த உணவகம் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

அதில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் உணவகம் மீது பிழை கூறுவதோடு, இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பதிவிட உள்ளதாகவும் மிரட்டுகிறார்.

பின்னர் தமது கையில் இருந்த உணவை தூக்கி வீசுவதோடு, உணவக ஊழியர் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டுகிறார்.

இதனையடுத்து குறித்த உணவக ஊழியர் பொலிசாரை அழைப்பேன் என கூறியதும், பொலிசாரை அழைத்து என்ன செய்ய போகிறாய்? நான் இங்கு பிறந்து வளர்ந்தவள். நீயோ கள்ளத்தோணி ஏறி இங்கு வந்து பிழைப்பவள் என அவதூறாக பேசியுள்ளார்.

குறித்த வீடியோவை இதுவரை பல ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதுடன், குறித்த பெண் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!