மஞ்செஸ்டர் குண்டுதாரியை லிபியாவில் இருந்துஅனுப்பியது பிரித்தானிய கடற்படை! புதிய அதிர்ச்சித் தகவல்!!

  • Prem
  • July 31, 2018
304shares

மஞ்செஸ்டரில் உள்ள அரினா மண்டபத்தில் கடந்த வருடம் மேமாதம் ஒரு இசைநிகழ்ச்சி இடம்பெற்றபோது ஒன்றில் ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தத்தாக்குதல் பிரித்தானியாவை உலுக்கியிருந்தது நீங்கள் அறிந்த செய்தி. ஆனால் இப்போது அந்தத்தாக்குதலை நடத்திய குண்டுதாரியான சல்மான் அபடியை பிரித்தானிய கடற்படையினரே லிபியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

லிபியாவில் 2014 இல் போர் இடம்பெற்றபோது அந்த ஆண்டின் ஓகஸ்ற் மாதத்தில் சல்மான் அபெடி மற்றும் அவரது இளைய சகோதரர் ஹாசிம் உட்பட்ட நூறு பிரித்தானிய குடிமக்கள் லிபிய தலைநகர் திரிப்பொலியில் இருந்து பிரித்தானிய படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் இவர்கள் எல்லாம் எச்.எம்.எஸ் என்ரபிரைசஸ் (HMS Enterprise) என்ற போர்க்கப்பல் மூலம் மோல்டாவுக்கு கொண்டுசெல்லபட்டு அங்கிருந்து விமானம் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட செய்தி இப்போது தான் பகிரங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு லிபிய போர்க்களத்தில் இருந்து பிரித்தானிய கடற்படையினரால் மீட்கப்பட்ட சல்மான் அபடிதான் 3 வருடங்களின் பின்னர் தற்கொலை குண்டுதாரியாகமாறி மஞ்செஸ்டர் அரினா மண்டபத்தில் தாக்குதலை நடத்தியிருந்தார்.இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!