லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

  • Prem
  • August 14, 2018
409shares

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் உள்ள பாதுகாப்பு அரண்மீது வாகனத்தை மோதவைத்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என ஸ்கொட்லான்ட் காவற்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் நாடாளுமன்ற முன்றலில் உள்ள பாதுகாப்பு அரண்மீது வாகனம் ஒன்று மோதவைக்கபட்ட சம்பவத்தில் இரண்டுபேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஆயுதந்தாங்கிய காவற்துறையினர் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு காரணமான 20 வயதுகளுடைய சாரதியையும் கைது செய்துள்ளனர். அவரது வாகனமும் கடுமையாக சோதனையிடப்பட்டது. ஆயினும் அதில் ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை.

அவர் மீது தற்போது தீவிரமான விசாரணைகள் நடத்தப்பட்டுவரும் போதிலும் அவர் காவற்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரகால குழுவான கோப்ரா அவசரமாக கூடவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!