30 வருடங்களாக அமெரிக்க பொலிசாரையே சுற்றலில் விட்ட தம்பதி; பின்பு நடந்த ஆச்சரியம்!

215shares

அமெரிக்காவின் New Mexicoவைச் சேர்ந்த ஒரு தம்பதி, 160 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒரு அரிய கலை பொக்கிஷத்தை திருடிவிட்டு 30 ஆண்டுகளாக, தாங்கள் இறக்கும் வரை கண்டுபிடிக்கப்படாமலேயே வாழ்ந்த ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Jerry Alterம் அவரது மனைவியான Ritaவும் Arizona மியூஸியத்திலிருந்து 160 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒரு அரிய பெயிண்டிங்கை திட்டமிட்டுத் திருடிச் சென்றார்கள்.

அந்த காலக்கட்டத்தில் CCTV கெமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர்களை பொலிசாரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. உலகத்திலுள்ள 140 நாடுகளை அவர்கள் சுற்றினார்கள்.

அவர்கள் இறந்தபோது அவர்கள் வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் இருந்தது.

இந்நிலையில் அவர்கள் இறந்தபின் அவர்களுடைய வீட்டை வாங்கிய ஒருவர் அந்த வீட்டில் இருந்த ஒரு படத்தை எடுத்து தனது கடையில் தொங்கவிட்டார்.

அதைப் பார்த்த பலரும் அது ஒரு விலை மதிப்பற்ற புகழ் பெற்ற ஓவியம் என்று கூற ஆரம்பத்தில் அதை நம்ப மறுத்த அவர் பின்னர் பொலிசாருக்கும் Arizona மியூஸியத்திற்கும் தகவலளித்தார்.

மியூஸியம் ஊழியர்களும் பொலிசாரும் வந்து பார்த்தபோது அது சுமார் 30 ஆண்டுகளுக்குமுன் திருடப்பட்ட ஓவியம்தான் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டபோது, தம்பதியினரில் உல்லாச வாழ்வைப் பற்றி தெரிய வந்ததோடு வித்தியாசமான ஒரு ஆதாரம் கிடைத்தது.

அது Jerry எழுதிய ஒரு கதைப் புத்தகம், அதில் அவர் ஒரு பாட்டியும் பேத்தியும் ஒரு மியூசியத்திலிருந்து எவ்வாறு ஒரு வைரத்தைத் திருடினார்கள் என்பதைக் கதையாக எழுதியிருந்தார்.

அதேபோல்தான் Jerryயும் அவர் மனைவியும் அந்த ஓவியத்தைத் திருடியது மியூசியத்தின் பாதுகாவலரின் வாக்குமூலத்திற்கு அப்படியே பொருந்தியது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க இயலவில்லை.

30 ஆண்டுகளாக தாங்கள் சாதுரியமாக திருடிய ஒரு அரிய பொக்கிஷத்துடன் வாழ்ந்த திருட்டு தம்பதியின் வழக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றுதான்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!