இதற்காகவா இவர்கள் வாலைச் சுருட்டினார்கள்?

  • Shan
  • June 12, 2018
45shares

சிங்கப்பூரில் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு ஒன்றை நடத்தி முடித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடந்து முடிந்தது என இருநாட்டு தலைவர்களும் வெளிப்படையாக தெரிவித்த நிலையில்,

இருவரும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் தற்போது 4 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

  1. வடகொரியா மற்றும் அமெரிக்கா பொதுமக்களின் அமைதி மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான முடிவு
  2. கொரியா தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்க அமெரிக்கா மற்றும் வடகொரியா இணைந்து செயல்படுதல்
  3. இந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி வடகொரிய தலைவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளபடி, அணு ஆயுதமற்ற கொரியா தீபகற்பத்தை நோக்கி நடவடிக்கை எடுக்கும் உறுதி.
  4. ஆவதாக போர்க் கைதிகள் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை

என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தமானது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!