எரிமலையினுள் சிக்கிய படகு! பயணிகளின் நிலை?

14shares
Image

ஹவாயிலுள்ள கிலாயூயா எரிமலையின் தாக்கத்தினால் படகு ஒன்றில் பயணித்த சுற்றுலா பயணிகள் 23 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பின்போது சிதறி, பறந்து வந்த பாறைகளும், குப்பைகளும் தாக்கியதில் ஒருவருக்கு கால் உடைந்ததுடன், பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹவாயில் அமைந்திருக்கும் பெரிய எரிமலையான கிலாயூயா எரிமலை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீற்றமடைய ஆரம்பித்திருந்ததுடன், எரிமலைக்குழம்பினையும் கக்கி வந்திருந்தது.

இந்த எரிமலையின் தாக்கத்தினால் பல சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு அருகாமையில் பயணிகள் படகு ஒன்று எரிமலையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த படகில் பயணித்த பயணிகள் 23 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி ஒருவருக்கு கால் முறிந்துள்ளதாகவும், பலர் தீக்காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?