குகைக்குள் கழிந்த திக் திக் நிமிடங்கள்! மக்கள் முன் வாய்திறந்த சிறுவர்கள்!!

  • Shan
  • July 19, 2018
54shares

தாய்லாந்தில் குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட அனைவரும், முதன்முறையாக மக்கள் மத்தியில் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

அவர்களை மீட்புப்பணியாளர்கள் கண்டு பிடித்தது முதற்கொண்டு தம்மை மீட்டமை தொடர்பிலான அதிசய தருணங்கள் குறித்து விவரித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி தாய்லாந்தில் காற்பந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு வரும் வழியில், சிங்ராய் மாநிலத்திலுள்ள குகையினை சுற்றிப்பார்ப்பதற்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், 9 நாட்களுக்கு முன்னர், பிரித்தானிய மீட்புக் குழவினரினால், சிறுவர்கள் குகைக்குள் நெடுந்தூரத்தில் உயிருடன் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவர்கள் குகையை சுற்றிபார்த்துக்கொண்டிருந்த வேளையில், ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், குறித்த குகையில் நீர் வரத்து அதிகமாகியது. இதனைத் தொடர்ந்து பயிற்சியாளரின் உதவியுடன் அனைத்து சிறுவர்களும் குகைக்குள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று தஞ்சமடைந்திருந்ததுடன், நீர் குறையாதமையினால் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில் சர்வதேச மீட்புப்பணியாளர்கள் மற்றும் நீரடி நீச்சல் வீரர்களின் உதவியுடன் பல நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்களின் கடுமையான முயற்சியுடன், வைத்தியரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மீட்புப்பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

தாய்லாந்தில் மழைக்காலமும் ஆரம்மபமாகவிருந்த நிலையில், அதற்கு முதல் சிறுவர்களை மீட்டாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மீட்புப்பணியாளர்கள் களத்தில் இறங்கினர்.

இந்த துணிச்சல் மிக்க அபாயகரமான மீட்புப்பணிகளின் போது, சிறுவர்களுக்கு போதுமான அளவு ஒக்சிஜன் வாயுவை கொண்டு சென்ற சமன் குணன் என்ற முன்னாள் தாய்லாந்து கடற்படை வீரர் தன்னுயிரை இழந்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம், குறித்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்று வந்தனர்.

இவ்வாறான ஒரு நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட குறித்த மாணவர்கள் தாங்கள் குகைக்குள் சந்தித்த அவலங்கள் மற்றும் துன்பங்கள் தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் குழாமில் உள்ள ஆங்கிலம் பேசத் தெரிந்த அப்துல் சாம் ஒன் எனும் சிறுவனே ஆங்கிலத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தாம், லுவாங் என்ற குகைக்குள் இரண்டு வாரத்திற்கும் மேலாக இருந்ததாக தெரிவித்த அவர். தங்களுக்கு உணவுகள் ஏதுமில்லாத நிலையில் வெறும் நீரை மாத்திரம் அருந்தி உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குகைக்குள் உணவுகள் கிடைக்காத போதிலும் நீர் சுத்தமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாங்கள் நம்பிக்கையை ஒரு போதும் இழக்கவில்லை என தெரிவித்த அவர், தாங்கள் எப்படியாவது மீட்கப்பட்டு விடுவோம் என்ற எதிர்பார்ப்பு வீண்போகவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, குகை்குள் சிக்கிக் கொண்டவர்களில் ஒருவரான 11 வயதான விப்ரன்ரன் குருவேங் தான் குகைக்குள் உணவு தொடர்பில் சிந்தித்து பார்ப்பதை தவிர்த்திருந்ததாகவும், எனேனில் அவ்வாறு சிந்தித்து பார்ப்பதனால், பசி உணர்வு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குகைக்குள் சிக்கிக் கொண்ட சிறுவர்களின் நிலை பாரிய பொருட்செலவில் திரைப்படமாக உருவாக்கம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்