அதிகாரம், ஊழல் தொடர்பை துண்டிக்க மூன்று வருடத்தில் பாரிய நடவடிக்கை!

9shares
Image

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஸ்ரீலங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் நிறைந்து காணப்பட்ட நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் நேற்று திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

ஜோர்ஜியாவின் பிரதமர் தலைமையில் ஆரம்பமான மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

இந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லையற்ற அதிகாரம் ஸ்ரீலங்காவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்ததாகவும்,

தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லையற்ற அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.

எனினும் இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தான் நாட்டை பொறுப்பேற்ற போது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜோர்ஜிய ஜனாதிபதியை Giorgi Margvelashvili நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுமார் 4.7 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஜோர்ஜியாவின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயத்துறை விளங்குவதுடன் அண்மைக்காலமாக சுற்றுலாத்துறையும் அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்து வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான விவசாய மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜோர்ஜியாவில் கல்வி கற்று வரும் ஸ்ரீலங்கா மாணவர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!