கூட்டுப்படையினரின் விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலி!

15shares

ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!