உலகின் மிகக் கொடிய பாம்பு பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

  • Shan
  • September 10, 2018
479shares

உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளில் பாம்புகள் இருந்தாலும் அவற்றுள் சில பாம்புகள்தான் அதிக விஷத்தினைக் கொண்ட பாம்புகளாக இருக்கின்றன.

அவற்றுள் மிக வீரியமான விஷத்தினைக் கொண்ட பாம்புகள் என்றால், கறுப்பு மாம்பா, நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன், இராச நாகம் மற்றும் பச்சை விரியன் போன்றனவாகும்.

உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாவதாகவும் அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் பாம்பின் விஷ பாதிப்பினால் உடல் ஊனமடைகின்றனர் என்றும் ஆய்வுப் புள்ளிவிபரம் ஒன்று சொல்கிறது.

கருப்பு மாம்பா (Black Mamba)

அந்தவகையில் உலகிலேயே மிகவும் கொடூரமான விஷத்தினைக் கொண்டதே கருப்பு மாம்பா எனப்படும் மாம்பா பேரினப் பாம்பாகும்.

மாம்பா பேரினத்தில் உள்ள கருப்பு மாம்பா ஆபிரிக்காவையே தனது வாழிடமாகக் கொண்டுள்ளது.

உலகின் அதிக நச்சு கொண்ட பாம்பு மட்டுமன்றி உலகிலேயே மிக வேகமாக ஊர்ந்துசெல்லவல்ல பாம்பினமாகவும் இது விளங்குவது தனிச்சிறப்பாகும்.

இது தனது வீரியமிக்க கடியினால் ஆண்டு தோறும் பத்தாயிரம் மனிதர்களை கொல்கிறது என்பது உண்மையிலேயே அதிர்ச்சிமிக்க செய்தியாகும்.

இது ஒரு கடியின்போது உமிழப்படும் விசம் ஒரே நேரத்தில் பன்னிரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு போதுமானது என கண்டறியப்பட்டுள்ளது.

மரணத்தின் முத்தம் (Kiss of Death)

மாம்பா பற்றிய பேரதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால் விஷ எதிர்ப்பு மருந்துகள் இன்றியே நூற்றுக்கு நூறுவீதம் கடித்தவர் கொல்லப்படுகின்றார். அதாவது விஷ முறிவு மருந்துகள் ஏற்றப்படுவதற்கான சந்தர்ப்பத்தினை மாம்பா விஷம் கொடுப்பதில்லை. அதனால்தான் மாம்பா பாம்புகளை ’மரணத்தின் முத்தம்’ (Kiss of Death) என கூறப்படுகின்றது. மேலும் இதன் விஷத்தினால் எண்ணற்ற மனிதர்கள் உடல் ஊனமடைகின்றனர்.

கருப்பு மாம்பா என்ற பெயர் இதற்கு வந்தது இதன் தோல் நிறத்தை அடிப்படையாக வைத்து அல்ல. உண்மையிலேயே மாம்பாவின் தோல் சாம்பல் நிறமாகும். ஆனால் இதன் வாய் உள் பகுதி முழுவதும் கருப்பு நிறத்தினைக் கொண்டது. இதனாலேயே கருப்பு மாம்பா என்ற பெயர் இதற்கு உண்டானது.

கருப்பு மாம்பாக்கள் மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை அதாவது ஒரு மனிதனைவிட நீளமாக வளரக்கூடியது. உடலில் உள்ள தசைகளை இந்த பாம்பின் நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறுதியில் இறப்பு நேரிடும்.

முதல் எதிரி

என்னதான் உலகின் அதி சக்திவாய்ந்த நச்சுப் பாம்பாக இருந்தாலும் மாம்பாக்களின் முதல் எதிரி கீரிகள் தான்.

கீரிகள் மாம்பாக்களை உண்பதற்காக சண்டையிட்டுக் கொல்கின்றன. மாம்பாக்களின் விஷத்தையும் தாங்கவல்ல சக்தி கீரிகளிடம் இருப்பதனால் மாம்பாக்கள் இறுதியில் தோற்று வீழ்கின்றன.

போதைப்பொருள்

கருப்பு மாம்பா விஷத்தைக்கொண்டு போதைப்பொருள் தயாரிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இந்த போதைப்பொருளை உட்கொள்பவர் மரணத்தை நோக்கி விரைந்து செல்வதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இது ஹெரோயின் போதைப்பொருளைவிட மிக மோசமானது என சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய வீரியமான விஷத்தைக் கொண்ட இந்தப் பாம்பினம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இல்லை என்ற மகிழ்ச்சியான தகவலையும் இங்கே கூறிமுடிக்கலாம்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!