மன்னாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி : பல மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்

Sri Lanka Police Mannar Law and Order
By Shalini Balachandran Dec 16, 2024 02:56 PM GMT
Report

மன்னாரில் (Mannar) பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தப்பியோடிய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) திருகோணமலை (Trincomalee) குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மறு நாள் 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கைக்கான உதவிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி

இலங்கைக்கான உதவிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது.

மன்னாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி : பல மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர் | 10 Years Old Girl Abused In Mannar Guy Arrested

குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பிச் சென்றார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு வருகிறது கட்டுப்பாட்டு விலை

அத்தியாவசிய பொருட்களுக்கு வருகிறது கட்டுப்பாட்டு விலை

தடுத்து வைத்து விசாரணை

இந்தநிலையில், குறித்த நபர் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மன்னாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி : பல மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர் | 10 Years Old Girl Abused In Mannar Guy Arrested

இதையடுத்து, தலைமன்னார் காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து இன்றைய தினம் (16) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்தியா இடையே புதிய கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை - இந்தியா இடையே புதிய கப்பல் சேவை ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017