ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முடங்கியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள்!

Hambantota Sri Lanka Customs vehicle imports sri lanka
By Sathangani Jul 26, 2026 06:26 AM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றதாகவும் குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

வரிகளை செலுத்த வேண்டும்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முடங்கியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள்! | 1025 Vehicles Imported To Sri Lanka Frozen At Port

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சிய தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

பொதுமக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

இலங்கைச் சுங்கத்திற்கு அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முடங்கியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள்! | 1025 Vehicles Imported To Sri Lanka Frozen At Port

தற்போது வரை விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெடித்த சர்ச்சை : குற்றச்சாட்டை மறுத்து வெளியான அறிக்கை

ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெடித்த சர்ச்சை : குற்றச்சாட்டை மறுத்து வெளியான அறிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025