மத்தள விமான நிலையத்தில் முதலீடு! முன்வந்துள்ள 19 நிறுவனங்கள்
மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி, செய்தியானது, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ளது.
மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்ப காலக்கெடு 10ஆம் திகதியுடன் முடிவடைந்ததாக பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
மேம்பாட்டுக்கான திட்டங்கள்
இதன்படி, விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், விருப்பம் தெரிவித்தல் (EOI) கோரிக்கை திறக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முன்மொழிவுக் கூட்டங்களில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றதாக பிரதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிறையில், குறித்த செயல்முறை இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய பிரதி அமைச்சர், விமான நிலையத்தைப் பராமரிக்க ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |