கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி - மட்டக்களப்பில் சோகம்..!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவர்கள் இருவரே இன்று காலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி