கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்!
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அந்த பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துரிதமான நடவடிக்கைகள்
இந்த நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைப்பொருள் பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் மேவும் சுட்டிக்காட்டினார்.

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |