நிருத்திய கலாலய மாணவிகளின் மூன்றாவது கின்னஸ் சாதனை..! (படங்கள்)
2000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கையில் உடுக்கை உடன் ஆனந்த தாண்டவம் என்ற தலைப்பில் நடனமாடி உலக சாதனை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றியுள்ளார்கள்.
குறித்த சாதனை அரங்கேற்றம் கடந்த 05/05/2023 அன்று தென்னிந்தியாவின் புதுச்சேரி நகரில் இடம்பெற்றுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் இருந்து பல கலைஞர்கள் பங்கேற்ற குறித்த நிகழ்வில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலா வித்தகர் ஸ்ரீமதி கிறிஸ்ரினா வசந்தி நேரு ஆசிரியரும் அவருடைய நித்திய கலாலயா நாட்டிய பள்ளியின் மாணவர்கள் செல்வி. தினேஸ் தக்ஷயா, செல்வி. ஜேம்ஸ் லேயா, செல்வி. இம்மானுவல், நிருஷினி, செல்வி. இம்மானுவல் மிருஷினி, செல்வி.சௌந்தரராஜ குருக்கள் தேஜஸ்வினி, செல்வி. நவாஸ் ஜதுமிதா, செல்வி. பிரதீபன் பிரதாயினி, செல்வி. பிரபாகரன் சரண்யா, செல்வி. தேவானந்த் கார்த்திகா, செல்வி தியாகராஜா அபிராஷினி, செல்வி. கிருபாகரன் கிருஷ்ணவாணி, செல்வி. திவாகரன் சிந்துஜா, செல்வி. அருண்குமார் அனுசாந்தினி, திருமதி பத்மா பொன்னையா ஆகிய 14 பேர் பங்கேற்றமை சிறப்பு அம்சமாகும்.










