அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி வெளியிட்ட தகவல்
21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் குறைபாடு
புதிய அரசியலமைப்பு திருத்தம் அரச தலைவருக்கு காணப்படுகின்ற அனைத்து அதிகாரங்களையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கவசமாக அமைந்துள்ளதாகவும், 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரச தலைவர் அமைச்சுப் பதவியினை வகிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைய, அரச தலைவருக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து கொண்டுவரப்பட வேண்டுமென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகயவியலாளர் சந்திப்பின்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை தொடர்ச்சியாக பாதுகாப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போதான அவதானம்
ஆகையினால் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்ததிற்கு அமைவாகவே அரச தலைவர் ஒருவருக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்துகின்றது.
21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரச தலைவர் ஒருவர் அமைச்சுப் பதவியினை வகிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதற்கமைவாகவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து அமைச்சுப் பதவியினையும் அரச தலைவர் ஒருவரே வகித்தார்.
ஜனநாயகத்தினை சக்திமிக்கதாக்கும் இலக்குடன், புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுமானால் குறித்த அரசியல் அமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கும்.
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கியவர்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். 17ஆவது 18 ஆவது 19 ஆவது 20 ஆவது என நான்கு அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கும் கை உயர்த்திய கொள்கையற்றவர்களே 21 ஆவது அரசியல் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்” என்றார்.https://www.parliament.lk/ta/constitution/main
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
